தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் போட்டி முதல் முறையாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ரைபிள் கிளப்பில் நடத்தப்படுகிறது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டனர்.

மேலும் பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு 24.07.22ம் தேதி முதல் 28.07.22ம் தேதி வரையில் போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்க உள்ளார்கள். மேலும் 29.07.22ம் தேதி முதல் 31.07.22ம் தேதி வரையில் ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று இறுதி நாளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO







Comments