திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது.

இதில் 47லட்சத்து 62 ஆயிரத்து 487 ரூபாயும், 81 கிராம் தங்கமும், 935 கிராம் வெள்ளியும், 23 வெளிநாட்டு கரன்சி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையர் செ.மாரியப்பன், ஸ்ரீரங்கம் கோயில் உதவி ஆணையர் கு. கந்தசாமி, மேலாளர் உமா , உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தினர் காணிக்கைகள் எண்ணும் பணியில் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu







Comments