48 லட்சம் கையாடல் - அரசு கல்வி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

48 லட்சம் கையாடல் - அரசு கல்வி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

அரசு பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, நாற்காலி, மேசை உள்ளிட்ட பள்ளி தளவாட பொருட்களும், பள்ளி நூலகத்திற்கு தேவையான நூல்களும், பள்ளி ஆய்வகத்திற்கு தேவையான ஆய்வு உபகரணங்களும் வாங்குவதற்கு மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி வருகிறது. இதற்கு முன்பு RMSA என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிவந்தது.

RMSA என்ற திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்களை வாங்குவதற்கு சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் நிதியை நேரடியாக ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எத்தகைய பொருட்கள் தேவை என்பதை தலைமையாசிரியர் இதர ஆசிரியர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். பின்னர் அப்பொருட்களை பள்ளி நிர்வாகம் நேரடியாக கொள்முதல் செய்துக்கொள்ள வேண்டும். இந்த விதிகளுக்கு புறம்பாக , பெருநிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக தேவையற்ற பொருட்களை கொள்முதல் செய்து, அனைத்து பள்ளிகளுக்கும், விநியோகித்ததாக கல்வி அதிகாரிகள் மீது புகார் எழுந்தது.

அதன் பேரில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கல்வி அதிகாரிகள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திருச்சி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், பள்ளி தலைமையாசிரியர்களாக இருந்த முத்துச்சாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணம், அகிலா, டெய்சி ராணி, ஜெய்சிங், கண்ணன் உள்ளிட்ட ஒன்பது பேர் அடங்குவர்.

இதில் சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் தற்போது பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர். இவர்கள் முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுக்கு தொடர்பு இல்லாத பொருள்களை அதிகம் விலை கொடுத்து குறிப்பிட்ட பெரிய நிறுவனத்திடம் இருந்து வாங்கி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளனர். அந்த பொருட்கள் தற்போதும் சில பள்ளிகளில் பயன்படற்று கிடக்கிறது. ஆறு லட்சம் வீதம் எட்டு பள்ளிகளில் செலவு செய்ததாக 48 லட்சம் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக கல்வி அதிகாரிகள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision