Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஆள்மாறாட்டம் செய்து போலியாக பத்திரம் செய்ய வந்த 5 பேர் கைது

திருச்சி கே.கே.நகர் அடுத்த கே.சாத்தனூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லட்சுமி என்பவர் துர்காதேவி, பிரேமானந்தா ஆசிரமம், மேலே பச்சைககுடி, புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயரில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டன் பஞ்சாயத்து சேதுராப்பட்டி சர்வே நம்பர் 77 New sub division 77/2. க்கு கட்டுப்பட்ட 1.68ஏக்கர் நிலத்தை போலியாக பத்திரம் செய்ய வந்தவர்களை சார்பதிவாளர் மற்றும் அலுவலக அலுவலர்கள் ஆகியோர் சேர்ந்து பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் லட்சுமி என்பவர் போலியான பெயரில் ராஜசேகர் என்பவருக்கு பவர் கொடுத்த போது சார் பதிவாளர் பொறுப்பு ஜோஸ்பின் கண்டுபிடித்தார்.

பின்னர் கே.கே.நகர் போலீசாருக்கு சார் பதிவாளர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜசேகர் 34, சீனமங்கலம், குமாரவயலூர், தேவகோட்டை, சிவகங்கை. பார்த்திபன் 34, நியூ போலீஸ் லைன், மேல சீதேவி மங்கலம் மண்ணச்சநல்லூர் திருச்சி. ஆறுமுகம் 39, முத்தன் கீழே பஞ்சப்பூர் எடமலைப்பட்டிபுதூர், திருச்சி. பாஸ்கர் 50, நேருஜி நகர் அரியமங்கலம், திருச்சி ஆகிய 5 பேரை பேரிடம் விசாரணை நடத்தினர்.

கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியான பெயரில் பத்திரம் பதிவு செய்ய முயன்றதாக சார் பதிவாளர் (பொறுப்பு) அளித்த புகாரையெடுத்து 5 பேரை கைது செய்து கே.கே.நகர் போலீசார் விசாரணை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *