திருச்சியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்!

திருச்சியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்!

5 அம்ச கோரிக்கையை‌ வலியுறுத்தி திருச்சி மின்வாரிய ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுதல், மாநில மின் வாரியங்களை பிரிக்கக் கூடாது, தனியாா் மயமாக்கலை கைவிடல், விவசாயத்துக்கு இலவச மின்சாரம், குடிசைத் தொழிலுக்கு மானியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னூா் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநில துணைத்தலைவா் ரங்கராஜன் தலைமை வகித்தாா். இதில்,ஐடியு, தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கம், பொறியாளா் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் மாவட்டத்தில் உள்ள 96 மின்வாரிய பிரிவு அலுவலகங்கள், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், மண்டல தலைமைப் பொறியாளா் அலுவலகம், ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி, மணப்பாறை, துறையூா் செயற்பொறியாளா் அலுவலகங்கள் முன்பு, அனைத்து பொறியாளா்கள், தொழிலாளா்கள், ஊழியா்கள் சமூக இடைவெளியுடன் கருப்புப் பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.