5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததில் குளறுபடி - ஏமாற்றும் மாநகராட்சி அதிகாரிகள்
திருச்சி மாநகராட்சி கோ.அபிசேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட கிராப்பட்டியில் பயணியர் நிழற்குடை அமைத்து தரும்படி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்சி மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மனுவை பரீசிலனை செய்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பயணியர் நிழற்குடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பயணியர் நிழற்குடை அமைக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு ரூபாய் 5 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. பின்னர் கிராப்பட்டியில் பயனியர் நிழற்குடை அமைக்கும் பணிகளை ஒப்பந்தகாரர்கள் தொடங்கினர். இதனை தொடர்ந்து புதிதாக நிழற்குடை அமைக்கும் பணிகள் ஆரம்பித்த சில நாட்களிலேயே பயனியர் நிழற்குடை அமைக்க மாநகராட்சி சார்பில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று கூறி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிழற்குடை பணிகளை நிறுத்த உத்தரவிட்டனர்.
பணி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் நிழற்குடை கட்டும் பணிகள் நிறுத்தியது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, மாநகராட்சி சார்பில் எவ்வித அனுமதி கடிதம் கொடுக்கப்படவில்லை என்றும், அனுமதி கேட்டு கடிதம் மூலம் கோரப்பட்டால் தங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று நெடுச்சாலை துறை அதிகாரிகள் கூறயுள்ளனர்.
இதுப்பற்றி 41 வார்டு அமமுக வட்ட செயலாளரும், சமூக ஆர்வலருமான ஆண்ட்ரூ மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தகார்கள் மூலம் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நிழற்குடை பணிகளை நிறுத்தி உள்ளனர். மீண்டும் நெடுஞ்சாலை துறை அனுமதியோடு நிழற்குடை கட்டும் பணி தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து புதிய நிழற்குடை கட்டுவது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மின் அஞ்சல் மூலம் ஆண்ட்ரூ புகார் அளித்துள்ளார். இதற்கு திருச்சி மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டு பதிலளித்த முதலமைச்சர் தனி பிரிவு கிராப்பட்டியில் புதிய நிழற்குடை கட்டுவதற்கு எந்த மதிப்பீடு தயார் செய்யவில்லை. எந்த பணியும் நடைபெறவில்லை என பதிலளித்து உள்ளனர்
ஆனால் நிழற்குடை கட்டுவதற்கு 5 லட்சம் நிதி ஒதுக்கி ஒப்பந்தக்காரர் மூலம் பணி தொடங்கப்பட்டது எப்படி? தனியார் நிறுவனங்களின் உதவியோடு புதிய பேருந்து நிழற்குடை கட்டப்படும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது எதன் அடிப்படையில்?
மக்களை ஏமாற்றவும் ,நெடுஞ்சாலை துறை எப்படியும் அகற்றிவிடும் என தெரிந்தும்
அதன் பிறகு அரசு பணத்தை சூரையாடி விடலாம் என திட்டமிட்டே சொற்ப தொகையில் முதற்கட்ட பணிகளை செய்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கு பிறகாவது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி வாங்கி நிழற்குடையை கட்டியிருக்கலாம். ஆனால் ஏனோ இதுவரை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சிறிய வேலை பணியுடன் நிறுத்தப்பட்ட புதிய நிழற்குடை பணியை மீண்டும் நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்று கட்டி தருமா திருச்சி மாநகராட்சி? மோசடியாக செட்டிங் செய்து அரசு பணத்தை கையாடல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn