ரேஷன் அரிசி கடத்திய 5 நபர்கள் கைது-2200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் குருணை அரிசி மூட்டைகள் பறிமுதல்.15.06.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர்
அவர்களது உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. R.வின்சென்ட் அவர்களது மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் உடன் அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக சமயபுரம் டோல் பிளாசா அக்கரைப்பட்டி செல்லும் சாலை சந்திப்பில்
இன்று அதிகாலை 4 மணி அளவில் வாகன தணிக்கை செய்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு பொலிரோ பிக் அப் மற்றும் ஒரு டாட்டா ஏசி வேன்களை சோதனை செய்தபோது அந்த இரண்டு வேன்களிலும் கருப்பு அரிசி குருணை மூட்டைகளுடன் சேர்த்து மறைத்து மாட்டு தீவனத்திற்கும் கோழி தீவனத்திற்கும்
விற்பனைக்காக எடுத்துச் சென்ற 44 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் இருந்த 2200 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியையும் கருப்பு அரிசி குருணை மூட்டைகளையும் கடத்த பயன்படுத்திய இரண்டு வேன்களையும் கைப்பற்றி மேற்படி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தாராநல்லூரை சேர்ந்த சண்முகம் பூணாம் பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் மணச்சநல்லூரைச் சேர்ந்த
லோகநாதன் தாள குடியைச் சேர்ந்த மாதவன் மற்றும் ராசாம்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் ஆகிய நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments