அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 வயது புள்ளிமான் இறப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 வயது புள்ளிமான் இறப்பு

துறையூர் அருகே எரகுடியில் இருந்து கரிகாலி செல்லும் சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 5 வயது மதிக்கதக்க புள்ளிமான் இறப்பு 

 திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியஞ்சோலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு மான்கள் இருந்து வருகின்றன, தொடர்ந்து மழை பெய்ததால் அப்பகுதிகளில் உள்ள ஐந்து வயது மதிக்கத்தக்க புள்ளிமான் எரகுடியில் இருந்து கரிகாலி செல்லும் சாலையில் கடந்துள்ளது, 

அப்பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 5 வயது மதிக்கதக்க புள்ளிமான் இறந்து கிடந்ததுள்ளது. வழியாகச் சென்ற பொதுமக்கள் மான் இறந்து கிடந்ததை கண்ட அப்பகுதியினர் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர், நிகழ்விடத்திற்கு வந்த

வனத்துறையினர் இறந்த புள்ளி மானின் உடலை கைப்பற்றி, மருத்துவரைக் கொண்டு உடற்கூறு பரிசோதனை செய்து ஆணின் இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர், ஐந்து வயது மதிக்கத்தக்க மான் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision