திருச்சி மாவட்டம் பெரகம்பியை சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் அடிதடி வழக்கில் சிறைக்கு அனுப்பாமல் குற்றத்தை குறைத்து பதிவு செய்து காவல் பிணையில் விடுவிக்க ஆறாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட சிறுகனூர் காவல்நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீது 2006 ஆம் ஆண்டு திருச்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிபதி கார்த்திகேயன் இன்று இந்த வழக்கிற்கான தீர்ப்பை அறிவித்தார். முன்னாள் காவல் ஆய்வாளர் செல்வராஜுக்கு லஞ்ச பணம் கேட்டதிற்காக ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் அதைக்கட்ட தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திற்காக ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments