திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் சிறை வளாகத்தில் அரங்கு அமைக்கப்பட்டு புத்தகங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
(29.3.2023) நேற்று மாலை திருச்சி கிளை இந்திய சிறை பணி, SOC SEAD மற்றும் திருச்சி அன்னாள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் இணைந்து ரூபாய் 50,000 மதிப்புள்ள புத்தகங்களை சிறைவாசிகளின் நூலகத்திற்கு திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் ஜெயபாரதியிடம் அன்பளிப்பாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை அன்புராஜ்,இயக்குனர், இந்திய சிறைபணிகள் நிறுவனம் திருச்சி சகோதரி சின்ன ராணிஇயக்குனர் SOC SEAD, சகோதரி மரிய ரஞ்சித லீலா, தலைமை ஆசிரியர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள் மற்றும் சிறை மேலாளர் திருமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments