கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தனது நிறுவன தயாரிப்பான நவாப் சீரகசம்பா அரிசி அதே பெயரில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு போலியாக தரமற்ற அரிசி விற்பனை செய்யப்படுவதாக திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர் பகுதிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட், பாலக்கரை, விஸ்வாஸ் நகர் பகுதிகளில் அரிசி குடோன்கள் கடைகள் உள்ளிட்ட 16 இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் தலைமையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரபல நிறுவனம் பெயரில் தரமற்ற அரிசி விற்பனை விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து குடோன் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் கிலோ பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான தரமற்ற அரிசி கைப்பற்றப்பட்டது.
இது குறித்து ரமேஷ் பாபு கூறுகையில்.. 50 டன் தரமற்ற அரிசியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று செயல்களில் ஈடுபடுவோர் மீது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கையை மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments