திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதி கல்லறை மேட்டுத் தெரு, சோழராஜபுரம், பாண்டமங்கலம் , நாச்சியார் கோவில், பாளையம் பஜார், பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, வாத்துக்காரத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான காய்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டவர்களை ரத்த பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
குறிப்பாக குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 500க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதி தனியார் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிகிறது. அப்பகுதிக்கு சென்று விசாரித்ததில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு உள்ள இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்ப்பட்டு சாக்கடை நீர் குடிநீர் குழாய்களில் கலந்ததே இதுபோல் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்ப்பட்டதாக தெரிகிறது. 

எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்தவும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், கடுமையாக பரவி வரும் மஞ்சள் காமாலை நோயை கட்டுப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளித்திடவும் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என திருச்சி மாநகர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி செயலாளர் ரா. சுரேஷ் முத்துவேல் கோரிக்கை வைத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision



            
            
            
            
            
            
            
            
            
            


Comments