மறுமலர்ச்சி திமுக திருச்சி சிறுகனூரில் நடத்துகின்ற அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு ஐந்தாயிரம் மக்களை அழைத்துச் செல்வது என்று, திருச்சி தெற்கு மாவட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட மதிமுக அலுவலகத்தில் (மண்ணச்சநல்லூர் நடராசன் மாளிகை) மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி தலைமையில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆ.துரைராஜ் முன்னிலையில் சனிக்கிழமை நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்று துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா சிறப்புரையாற்றினார்.மாநாட்டிற்கு செய்யவேண்டிய ஆயத்தப்பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
திருச்சி சிறுகனூரில் நடைபெறும் அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117-ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு 200 வேன்களில் 5000 பேர் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.மாநாட்டு சுவர் விளம்பரப் பணியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய, நகர நிர்வாகிகளை இக்கூட்டம் பாராட்டுகின்றது. இன்னும் முழுவீச்சில் திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் நூறு இடங்களில் சுவர் விளம்பரம் செய்வது என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாவது ஆண்டில் முழுக்க முழுக்க மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆகவே, திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களை திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக பாராட்டுகின்றது.முப்பதாண்டுகள் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் தென்னகத்தின் குரலாக ஒலித்த கழகத்தின் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள், நாடாளுமன்றப் பணிகள் முடிவுற்ற மறுநாள் அறிவிப்பு செய்து, தமிழ்நாட்டில் எட்டு இடங்களில், எட்டுத்தலைப்பில் கொட்டி முழங்கிய பொதுக்கூட்டம், அந்த பொதுக்கூட்டத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள். இவையெல்லாம் மறுமலர்ச்சி திமுகவின் தகுதியை மக்கள் மன்றத்தில் உயர்த்தியுள்ளது. எண்பது வயதைக் கடந்த தலைவர் வைகோ அவர்களின் மக்கள் பணிகளுக்கு இக்கூட்டம் மகிழ்ந்து பாராட்டுகின்றது.தீரர்கள் கோட்டம் திருச்சியில் நடபெறும் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டின் எழுச்சிக்குப் பின்பு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மறுமலர்ச்சி திமுக என்ற நமது மாசற்ற அமைப்பும் அங்கீகாரம் பெற்று புத்தெழுச்சியுடன் செயல்படும். அதற்குத் தகுந்தாற்போல நமது களப்பணிகளும், பங்களிப்பும் திருச்சி அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெறச்செய்வதற்கு கடுமையாக உழைப்பதற்கு தீர்மானிக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் இருந்து ரஷ்யா நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவன் கிஷோர் சரவணனை, உக்ரைன் போர்க்களத்தில் ஈடுபடுத்தும் ரஷ்யா இராணுவத்தில் இருந்து மீட்டு அவரது
பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக, 68 பல்வேறு கட்சி எம்.பிக்களின் கையெழுத்தைப் பெற்று நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை இருமுறை சந்தித்தும், வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை இருமுறை சந்தித்தும், எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அவர்களுடன் சந்திப்பு, வெளிவிவகாரத் துறை அதிகாரிகளை அடிக்கடி சந்திப்பது என கடந்த இருபது நாட்களாக தொடர்ந்து போராடி வரும் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்களின் மனிதநேய உணர்ச்சிக்கு இக்கூட்டம் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் புஷ்பா சுப்பிரமணியன், வைகோ சுப்பு, பெ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆ.மகுடீஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் பா.பாதுஷா, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.திருமாவளவன், அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் சாத்தனூர் ஆ.சுரேஸ், மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.சுப்ரமணியன், மருங்காபுரி தெற்கு ஒன்றியச் செயலாளர் மருதம்பட்டி எம்.நடராசன், மணப்பாறை நகரச்செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, மணிகண்டம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆரோக்கிய ரெக்ஸ் தனராஜ், மணிகண்டம் வடக்கு ஒன்றியச் செயலாளர்
க.அண்ணாத்துரை, மருங்காபுரி வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் நெல்லிப்பட்டி குமரேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணவை தமிழ்ஹரி, மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் இராமநாதன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பெல் ச.மணிவண்ணன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஆர்.ராமன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர்கள் கம்பை சேகர், பூங்குடி சுப்பையா, சுரேஸ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பா.ஜெகநாத், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வினோத் (எ) கோவிந்தராஜன், மாவட்டப் பிரதிநிதிகள் வி.ஒண்டிமுத்து, வைரவேல், சிங்காரவேலன், சாத்தனூர் தியாகராஜன், மணிகண்டம் கே.சக்திவேல், முள்ளிக்கரும்பூர் சிவக்குமார், கீரிக்கல்மேடு சுந்தரராஜன், து.பாலமுத்து, சூரியூர் அ.சக்திவேல், அசூர் ம.ஜெயபால், அசூர் எஸ்.பெரியண்ணன், குழுமணி எம்.கணேசன், கோப்பு அய்யர்,
கோப்பு அப்பாதுரை, அரசங்குடி ஜெயராமன், அரசங்குடி அருள்மொழிவர்மன், வி.சின்னத்தம்பி, மெடிக்கல் த.பெரியசாமி, பி.அசினாபேகம், அரசங்குடி கலியமூர்த்தி, அரசங்குடி சொ.ஆறுமுகம், இனியானூர் மாரிமுத்து, மணப்பாறை நகரம் யூ.சிராஜ்தீன், ரியல் நாராயணன், என்.முஸ்தபா, ஜான், ஜி.கனகசபை, ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத் துவக்கத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம் அவர்கள் வரவேற்புரையாற்ற நிறைவாக சரவண கணேசன் நன்றி கூறினார். தீர்மானங்களை தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஹென்றி சின்னப்பன் படித்தார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் மாவட்ட அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மறைந்த மாவட்டச் செயலாளர் மண்ணச்சநல்லூர் இரா.நடராசன் சிலைகளுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
https://t.me/trichyvision
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
Comments