கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு சரக்கு வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக திருச்சி கோட்டை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் உதவி ஆய்வாளர் வாழ சட்டநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருச்சி சென்னை புறவழி சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த இரண்டு சரக்கு வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் 50 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த மூட்டைகள் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது எனத் தொடர்ந்து. இரண்டு சரக்கு வாகனத்தில் இருந்த மொத்தம் 1070 கிலோ புகையிலைப் பொருட்களையும், சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு 55 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இத்தொடர்பாக சரக்கு வாகனத்தில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த சேகர், ஓசூர் தாலுகா பேரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன், தேன்கனிக்கோட்டை சந்தனபள்ளியைச் சேர்ந்த கோவிந்தராஜ், முரளிகுமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments