மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 58 ஆவது தேசிய நூலக வார விழா, நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளன. அதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் வாசகர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நூலகம் என்பது அருமை.
அதில் உறுப்பினர் என்பது பெருமை.
“அனைவருக்கும் நூலகம் “.
நூலகத்தின் ஏழு நாட்கள் :
14.11.2025. வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணி வாசகர் நாள் வாசிப்பு மாரத்தான் 1000 வாசகர்கள் 1000 நூல்கள் வாசிப்பு & 1000 உறுப்பினர் சேர்க்கை
வாசிப்பு மாரத்தான் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் இணைந்து ஒன்றாக புத்தகம் படிக்கும் நிகழ்வு மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்வு.
பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதிக உறவினர்களை சேர்க்கும் நூலக ஆர்வலர்களுக்கு தக்க பரிசுகள் வழங்கப்படும்.
15.11.2025 சனிக்கிழமை மாலை 3:00 பெற்றோர் நாள் நகைச்சுவை பட்டிமன்றம் “வாழ்வை வளப்படுத்துவது ஊடக அறிவா? அல்லது நூலக அறிவா? “
குடும்பங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, அதிக மொபைல்,தொலைக்காட்சி பயன்பாட்டில் இருந்து பொதுமக்களை வெளியே வரவழைக்கும் நிகழ்ச்சி.
16.11.2025. ஞாயிற்றுக்கிழமை சிறார் நாள் காலை 10:30 ஓவியப் போட்டி ‘வாசிப்பை நேசிப்போம். ‘ஓவிய ஆசிரியர் பெருமாள். 1-4 , 5-9 , 10-12 வகுப்புகளுக்கு மூன்று பிரிவுகளாக நடைபெற்று மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
காலை 11:00 – 1:00 ஓரிகாமி புத்தகம் உருவாக்குதல் & கண்காட்சி
ஆசிரியர் அருணபாலன் .
மாலை 3:00 மாறு வேட போட்டி-
“தமிழக வரலாற்று கதாநாயகர்கள். “
2 நிமிடத்தில் நம் கண்முன்னே.
முதல் மூன்று பரிசுகள் மூன்று பிரிவுகளில்.
17.11.2025 திங்கள்கிழமை மூத்தோர் நாள் இலவச மருத்துவ முகாம் & பரிசோதனை காலை 10:30 – 12:30 மணி இலவச எலும்பு மூட்டு மருத்துவ முகாம் & BMD எலும்பு அடர்த்தி பரிசோதனை Dr. M. கலைவாணன்
MBBS , MS ( ortho ) KEM MUMBAI
அப்போலோ மருத்துவமனை, திருச்சி.
மாலை 3:00 – 5:00 மணி இலவச சித்த மருத்துவ முகாம் & உடல் எடை, இரத்த அழுத்தம் , சர்க்கரை அளவு பரிசோதனை Dr. காமராஜ்
BSMS, Dip (yoga ) மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்( ஓய்வு)
18.11.2025 செவ்வாய்க்கிழமை மகளிர் நாள் மகளிர் கைத்திறன் பொருட்கள் போட்டி & கண்காட்சி. அனைத்து பெண்களும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை. சிறந்த மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
19.11.2025 புதன்கிழமை இளையோர் நாள் காலை 10:30 வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி J. ஆகாச மூர்த்தி
நிறுவனர், மூத்த ஆசிரியர்,
TAF IAS அகாடமி.
மாலை 3:00 பொது அறிவு போட்டி தேர்வு TAF IAS அகாடமி, திருச்சி.
வெற்றி பெறும் முதல் மூன்று இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
20.11.2025 வியாழன் கிழமை சிறப்பு மனிதர் நாள் நூலக சுற்றுலா & தனித்திறன் நிகழ்ச்சிகள் காலை 10:30 சிறப்பு பள்ளி குழந்தைகள், மாலை 2:30 பார்வைத்திறன் குறைபாடு உள்ள பள்ளி குழந்தைகள்
“அனைவருக்கும் நூலகம் “என்ற வகையில் நடைபெற உள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் கலந்து கொள்ளவும்,
உறுப்பினர்களாக இணைந்து கொள்ளவும் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments