Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கரோனா தொற்று!

No image available
Write caption…

Start writing or type / to choose a block

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சி கள்ளிப்பட்டியை சேர்ந்த 75 வயது மூதாட்டி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், மூதாட்டியை பார்க்க வந்த உறவினர் திருச்சியை சேர்ந்த செவிலியர் மற்றும் அவரது கணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கள்ளிப்பட்டியில் அவரை சார்ந்த குடும்பத்தினருக்கு பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டது. .

Start writing or type / to choose a block

இதில் மூதாட்டி, 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் மற்றும் 56 வயது முதியவர் உள்ளிட்ட இரு ஆண்கள் என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் வீடு தனிமைப்படுத்தப்பட்டு 6 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வருவாய் வட்டாட்சியர் தமிழ்கனி, காவல் துணை கண்காணிப்பாளர் சு.குத்தாலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு அண்ணாதுரை, ரேவதி உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *