திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்ட பகுதிகளில் பாட்டில் மணி (எ) தினேஷ் குமார், வசந்த் மற்றும் ரவி போஸ்கோ ஆகியோர்களின் கூட்டாளிகள் கஞ்சா விற்பது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண். 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ.வருண்குமார், உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது, விற்பனைகாக கஞ்சா வைத்திருந்த 1. கருவா (எ) ராமசந்திரன், 2.ஆரோன் நவீன் குமார் 3. சத்தியா (எ) சக்திவேல், ஆகியோர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பட உள்ளனர்.

மேலும் துவாக்குடி பகுதியில் விற்பனைகாக கஞ்சா வைத்திருந்த 1. சரவணக்குமார், 2. ஐய்னாஸ் (எ) ரமேஷ் மற்றும் 3. சரவணன் (எ) பரட்டை சரவணன் ஆகியோர்களை கைது செய்து துவாக்குடி காவல் நிலையத்தில் அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.

கடந்த (05.12.2023)-ஆம் தேதி பாட்டில் மணி (எ) தினேஷ் குமார்-ஐ கைது செய்தனர். மேலும் வசந்த் மற்றும் ரவி போஸ்கோ ஆகியோர்களை கடந்த (15.12.2023)- அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments