திருச்சிராப்பள்ளி வன மண்டலம், திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் , திருச்சிராப்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட M .R பாளையத்தில் அமைந்துள்ள யானை மறுவாழ்வு மையத்தில் இந்திரா வயது 64 என்ற பெண் யானை கடந்த 5 மாத காலமாக உடல்நலக்குறைவாக இருந்ததை தொடர்ந்து மாவட்ட வன அலுலரால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி நாமக்கல், ஒரத்தநாடு பேராசிரியர்கள் மற்றும் திரு .சந்துரு மண்டல இணை இயக்குநர்,

கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினர்கள் பரிந்துரைந்த சிகிச்சை முறைகளை யானைக்கு கடந்த 5 நாட்களாக படுத்தநிலையிலயே , சிறப்பு மருத்துவ குழு மருத்துவர்களின் அறிவுரையின்படி வனக்கால்நடை மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வரப்பட்டபோதே யானை சிகிச்சை பலனின்றி நேற்று 01.11.2025 ஆம் தேதி
காலை சுமார் 8.00 மணியளவில் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

பின் நேற்று 01.11.2025- ம் தேதி மதியம் சுமார் 12.45 மணியளவில் திரு S.கணேசலிங்கம் மாவட்ட வன அலுவலர்(கூ/பொ), திருச்சி அவர்களின் தலைமையில் திரு.I.காதர் பாஷா உதவி வனப்பாதுகாவலர் /உதவி இயக்குநர் (mini zoo and park) வனச்சரக அலுவலர்கள் திரு. V.P.சுப்ரமணியம் , திரு.J.ரவி உள்ளிட்ட வனப்பணியாளர்கள் மற்றும் Voice of Trust (NGO) திருமதி.R.கவிதா ஆகியோர் முன்னிலையில் Dr.N.கலைவாணன் வன கால்நடை பராமரிப்பு அலுவலர்,SMTR அவர்களின் தலைமையில் Dr.S. செந்தில்குமார்,

உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்பு துறை லால்குடி, Dr. V. ரேவதி, உதவி இயக்குநர், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு திருச்சி, Dr.M.சிவச்சந்திரன், வன கால்நடை உதவி மருந்துவர், Dr.சுமையா நஷீரா, கால்நடை உதவி மருத்துவர், நோய் புலனாய்வு பிரிவு, Dr. J.ஜெயகீர்த்தி, கால்நடை உதவி மருத்துவர் சிறுகனூர், திரு. D.பாக்யராஜ் ஆய்வக உதவியாளர், நோய் புலனாய்வு பிரிவு ஆகியோர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும், உடற்கூராய்வு செய்யப்பட்ட யானையின் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது.

பின்பு உடற்கூறாய்வு செய்யப்பட்ட யானை M.R. பாளையம் R.F·ல் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் பிண பரிசோதனை செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே குழி தோண்டி தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிகளின்படி புதைக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments