சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 688 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 688 சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணி தடை உத்தரவு அமலில் உள்ளதால் தமிழக முதல்வரின் உத்தரவின் படி வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆணையிட்டார்.
அதன்படி சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் திருச்சி(32), அரியலூர்(6) தர்மபுரி(102), ஈரோடு(99), கரூர்(6) பெரம்பலூர்(3) புதுக்கோட்டை(8) சேலம்(108) தஞ்சாவூர்(116) திருப்பூர்(57)நீலகிரி(30) கிருஷ்ணகிரி(6) ஆகிய 13 மாவட்டங்களில் தங்கி பணி புரிந்த மொத்தம் 688 தொழிலாளர்கள் திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சமூக இடைவெளி கடைபிடித்து சிறப்பு ரயில் மூலம் பயணிகளை சட்டிஸ்கர் மாநிலத்திற்கு மாவட்ட ஆட்சியர் இன்று அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.விஸ்வநாதன், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன், திருச்சி மேற்கு வட்டாட்சியர் முகுந்தன், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் சத்தியபாலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.