திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சாக்ஸீடு ஆதரவற்றோர் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது இங்கு ஆதரவற்ற மற்றும் முறை தவறி பிறக்கும் குழந்தைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வளக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட வந்த ஏழு குழந்தைகளுக்கு திடீர் மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
பிறந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் ஆன குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையெடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments