உழவர் சந்தையில் 7 விற்பனையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

உழவர் சந்தையில் 7 விற்பனையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தையில் 7 விற்பனையாளர்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி பொருத்த வரை 12 விற்பனையாளர்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி 123 விற்பனையாளர்களிடம் உழவர் சந்தையில் பரிசோதித்து மாதிரிகளை பெற்றுக் கொண்டு ஆய்வு செய்தனர். அதில் 7 நபர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சோமரசம்பேட்டை, குழுமணி, கல்நாயக்கன் தெரு, உறையூர் ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளிலிருந்து தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தொற்று உறுதி  செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும்  அருகில் இருந்தவர்களிடம்  சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்   தற்காலிகமாக ஐந்து கடைகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் காந்தி மார்க்கெட் பகுதிகளில் சில விற்பனையாளர்களுக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது உழவர் சந்தை, மீன் மார்க்கெட்டுகளில் விற்பனையாளர்களுக்கு தொற்று அதிகரித்து வண்ணம்  இருக்கின்றது.

எனவே அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதியே தற்காலிகமாக கடைகளை மூடப்பட்டுள்ளது . அதற்காக வேறு இடத்திற்கு சந்தையை மாற்றும் எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81