தாலி செயினை பறித்து சென்ற நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

தாலி செயினை பறித்து சென்ற நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, திருச்சி மாநகரத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற வழக்குகளில் ஈடுப்பட்ட எதிரிகள் மீது பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த (24.07.2019)-ந் தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பீட்டர் சர்ச் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண்ணை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் 6 ½ பவுன் தாலி செயினை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்தும், புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் எதிரியான சமயபுரம் ஊரான் அடிகளார் தெருவை சேர்ந்த கலையரசன் (27), த.பெ.முருகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த (10.10.2019)-ந் தேதி மேற்படி எதிரி கலையரசன் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தால் இன்று (20.05.2024)-ம்தேதி, மேற்படி எதிரி கலையரசனுக்கு ச/பி 392 r/w 397 IPC ன்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என்றும் அந்த தொகையை எதிரியிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்திய பொன்மலை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மேலும் புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்கள் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision