தேர்தல் நடத்தை விதி மீறியதாக திருச்சி மாநகரில் இதுவரை 70 வழக்குகள் பதிவு

தேர்தல் நடத்தை விதி மீறியதாக திருச்சி மாநகரில் இதுவரை 70 வழக்குகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகரில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்களிலும், பிரச்சினைகளிலும் ஈடுபடக்கூடாது என்று கருதுகிற 185 பேர் மாநகர் முழுவதும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் 160 பேர் மீது 107-வது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I