மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் கோலாகலமாக நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு விழா.
700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டும் இன்று ஜல்லிக்கட்டு விழா புனித வியாகுலமாதா தேவாலயத்தின் முன்பு உள்ள திடலில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 700 ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகின்றன. சீறி வரும் காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களம் காணுகின்றனர்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் 5 கிலோ அரிசி வழங்கப்படும் நிலையில் போட்டியில் வீரர்களின் பிடிக்கு அடங்க மறுத்து வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் காளையர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, அண்டா, ரொக்கப்பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. 200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments