திருச்சி விமான நிலையத்தில் 73.49 லட்சம் மதிப்பிலான 1596 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 73.49 லட்சம் மதிப்பிலான 1596 கிராம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்து சென்று சோதனை செய்த போது  தஞ்சை மாவட்டம் புனவாசல் சேர்ந்த மணிமாறன் என்ற பயணியிடம் ரூபாய் 36 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான 798 கிராம் தங்கத்தையும், இதே விமானத்தில் பயணம் செய்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த செந்தில் என்ற பயணியிடம் இருந்து ரூபாய் 36 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான 798 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். 2 பயணிகள தங்கள் உடலில் மறைத்து எடுத்து வந்த 1596 கிராம் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 73.49 லட்சம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I