737 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் முககவசம் அணியாமல் செல்பவர்களிடம் போலீசார் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் காலை முதல் இரவு வரை தீவிர சோதனை நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் பலருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது இதை கண்டித்து ஆங்காங்கே ஒருசிலர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மாநகரில் 420 பேரிடம் தலா ரூபாய் 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 11 பேருக்கு தலா ரூபாய் 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் திருவெறும்பூர், துவாக்குடி, பாய்லர் ஆலை ஆகிய பகுதிகளில் நவல்பட்டு போலீசார் நடத்திய சோதனையில் முககவசம் அணியாமல் சென்ற 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய