திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் சார்பில் 124ம் ஆண்டு திருவிழா டிச.26ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று ரூபாய் 10, 20, 50, 100, 200, 500 மற்றும் நாணயங்களால் தோரணம் முதல் கொண்டு ரூபாய் நோட்டுகளால் நேர்த்தியாகவும், அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. தனலட்சுமி அலங்காரம் தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments