திருச்சிஉறையூரில் கடைக்கு இடைஞ்சலாகயிருந்த 75-ஆண்டு வேப்பமரம் வெட்டி அகற்றம்

திருச்சிஉறையூரில் கடைக்கு இடைஞ்சலாகயிருந்த 75-ஆண்டு வேப்பமரம் வெட்டி அகற்றம்

திருச்சி, உறையூர், நாச்சியார் கோவில் தெருவை சார்ந்தவர் இராமானுஜம். இவர் இவருக்கு சொந்தமான இடத்தை கடைகளாக மாற்றி ஜோதி பூஜா ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவருடைய மேற்படி கடைக்கு வெளியே சாலையோரத்தில் சுமார் 75-ஆண்டுகள் நன்கு வளர்ந்த வேப்பமரம் ஒன்று உள்ளது.

இந்த மரத்தை தனது கடை வியாபாரத்திற்கு இடைஞ்சலாக இருந்ததாக கருதிய இராமானுஜம். கடந்த 07.05.2025ந் தேதி அதிகாலை ஜனநடமாட்டம் இல்லாத நேரத்தில் சட்டவிரோதமாக திருச்சி மாநகராட்சியில் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் வேறோடு வெட்டி விற்றுள்ளார். 

பொது இடத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டுமென்றால் சட்டப்படி எழுத்துபூர்வா மாக அரசிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதியில்லாமல் தனிநபர்கள் மரங்களை வெட்டுவதோ, சேதம் விளைவிப்பதை சுற்றுச்சூழல் குறித்த குடிமக்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயம் சரத்து (51)(A) பகுதியில் விரிவாக தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படுகிறது.

மேலும் முறையான அனுமதியோடு பொது பாதுகாப்பிற்காக கூட சாலை விரிவாக்கம் அல்லது இதர வளர்ச்சி பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரங்களுக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளர்க்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது. மேலும் சமிபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி சட்டவிரோதமாக குஜராத்தில் வெட்டப்பட்ட சுமார் 150-மரங்களுக்கு, தலா ரூபாய் ஒரு இலட்ச வீதம் 1-1/2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

எனவே இந்த வேகாத அக்னி வெயிலிலும் சுமார் 75-ஆண்டுகள் நிழல் தந்து பயன்தந்துள்ள வேப்ப மரத்தை சட்டவிரோதமாக அரசிடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல், வேறோடு வெட்டி விற்று தனிநபர் இலாபமடைந்த மேற்படி இராமானுஜம் மீதும் அவருக்கு இந்த சட்டவிரோத செயலுக்கு துணையாகயிருந்தவர்கள் மீது உயர்நீதிமன்றவழிகாட்டுதலின்படி வெட்டப்பட்ட ஒவ்வொரு மரங்களுக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வலியுறுத்துவதோடு, குற்றவியல் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களும், திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும் எடுக்கும் படி தாழ்மையுடன் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுகொள்கிறோம்.   கே.சி.நீலமேகம், மாநில பொருளார், மக்கள் சக்தி இயக்கம், செயல் தலைவர்,தண்ணீர் அமைப்பு, அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision