இரண்டு குடிநீர் நிறுவனம் தற்காலிக தடை 7500 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
இன்று (21.04.2023) உணவு பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் M.பிரதீப்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வாளவந்தான் கோட்டை மற்றும் பழங்கனகுடி நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறை
துவாக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஆகிய பகுதியில் உள்ள இரண்டு குடிநீர் உரிமம் மற்றும் BIS சான்றிதழ் இல்லாத காரணத்தினாலும் மற்றும் ஒரு சில குடிநீர் பாட்டில்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருந்த காரணத்தினால் சுமார் 7500 லிட்டர் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலே கண்ட இரண்டு குடிநீர் நிறுவனங்களும் குடிநீர் தயாரிப்பதை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் BIS தயாரிப்பில் ஈடுபட்டால் எடுக்கப்படும். சான்றிதழ் இல்லாமல் குடிநீர் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை
இது போன்று பொதுமக்கள் தங்கள் பகுதியில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாமலும் மற்றும் சந்தேகத்திற்கு இடமான அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகார் எண்களுக்கு தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தாங்கள் அளிக்கும் புகார் ரகசியம் காக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
உணவு கலப்பட புகாருக்கு 9444042322 & 9585959595, மாநில புகார் எண் 9444042322
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn