முயல் வேட்டையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 அபராதம்- வனத்துறை நடவடிக்கை

முயல் வேட்டையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு  ரூ.75,000 அபராதம்- வனத்துறை நடவடிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் முயல் வேட்டையில் ஈடுபட்டு அதனை முகநூலில் பதிவிட்ட பள்ளி மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறையினர் விலங்குகளை காப்பாற்றுவது நமது கடமை எனவும் அறிவுறுத்தினர்.

குளித்தலையை சேர்ந்த சரத்குமார் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில்
முயலை வேட்டையாடிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அவரை, திருச்சி மாவட்ட வன அலுவலர் உத்திரவின் பேரில் வியாழக்கிழமை திருச்சி வனச்சரக அலுவலர் பிடித்து விசாரித்ததில் மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்த மூன்று பள்ளி செல்லும் சிறுவர்கள் வேட்டையாடியது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மூன்று பேரையும் வெள்ளிக்கிழமை மணப்பாறை வனச்சரக அலுவலர் மகேஸ்வரன், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் விசாரித்ததில் மாணவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு ரூ.75000 இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த ஊர் மக்களிடமும் வேட்டையாடுவது குற்றம் எனவும் வன விலங்குகளை காப்பாற்றுவது நமது கடமை எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO