கருமண்டபம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 75ஆவது குடியரசு தின விழா

கருமண்டபம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 75ஆவது குடியரசு தின விழா

நமது இந்திய திருநாட்டின் சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்கள், கருமண்டபம் வசந்த நகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜே.பி. நகர், ஜே.ஆர்.எஸ். நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாப்பட்டு வருகிறது.

இன்றைய 75ஆவது குடியரசு தினத்தில், கருமண்டபம் JRS நகரில், நலச்சங்க தலைவர் முனைவர் இராசரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 55ஆவது மாமன்ற உறுப்பினர் ராமதாஸ் முன்னிலை வகிக்க, நலச்சங்க துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்பு நல்கிட, நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் அந்தோணிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

நலச்சங்கத்தின் துணைத் தலைவலர் கிருஷ்ணசாமி தேசியக் கொடி பறக்கவிட்டு சிறப்புரையாற்றினார். நலச்சங்கத்தின் செயலாளர் அக்பர் ஹூசைன் நலச்சங்கத்தின் சாதனைகளை விளக்கியும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் செய்ய இருக்கும் பணிகள் குறித்தும் பேசினார். கடந்த சுதந்திர தின விழா சமயத்தில் திருச்சி மாநகராட்சி தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.

தற்போது குடியரசு தின விழா சமயத்தில் தூய்மை நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சீறிய முறையில் சிறப்பாக பணியாற்றி விருதுகளை குவித்து வரும் நமது மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான KN.நேருவிற்கும், நலச்சங்கத்தின் நிர்வாகிகள்/உறுப்பினர்கள்/குடியிருப்போர் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

55ஆவது மாமன்ற உறுப்பினர் நலச்சங்கத்தின் பணிகள் குறித்ததும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் பேசினார். நலச்சங்கம் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றுவேன் என உறுதி கூறினார். இவ்விழாவில் நலச்சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவின் இறுதியில் சங்கத்தின் பொருளாளர் சகாயராஜா வருகை தந்த அனைவருக்கும் மற்றும் விழா நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஒருங்கிணைத்த அனைவருக்கும் (குறிப்பாக செயலாளர் மற்றும் குழுவினர்) நன்றி தெரிவித்தார். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிவசாமி குடும்பத்தினர் ஏற்பாட்டில் சிறப்பான காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision