இந்திய நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 744 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம், மாநில விளையாட்டு ஆணையத்தின் மூலமாக சுதந்திர தின ஓட்டத்தை 13.08.2021 முதல் 02.10.2021 வரை நடத்தி வருகிறது.
 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகிற 02.10.2021 அன்று இந்திய 75 வது
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகிற 02.10.2021 அன்று இந்திய 75 வது 
ஆண்டு சுதந்திர தின ஓட்டம் (Fit India Freedom Run 2.0) நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்க, அனைவரும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக
 வருகிற 02.10.2021 அன்று காலை 07.00 மணி அளவில் சுதந்திர தின ஓட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பழைய தபால் நிலையத்திற்கு முன்பாக அமைந்து இருக்கும் உப்புசத்தியாக கிரக நினைவுத் தூணில் இருந்து துவங்கி அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெறும். இதில் அனைத்து இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்று தங்கள் உடல் தகுதியினை மேம்படுத்திட வேண்டும்.

 மேலும் விபரங்களுக்கு நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் அலுவலகத் தொலைபேசி எண் : 0431-2421240 மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத் தொலைபேசி எண் : 0431-2420685 ஆகியவற்றில் தொடர்பு
மேலும் விபரங்களுக்கு நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் அலுவலகத் தொலைபேசி எண் : 0431-2421240 மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத் தொலைபேசி எண் : 0431-2420685 ஆகியவற்றில் தொடர்பு 
கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://fitindia.gov.in/freedom-run-2.0 என்ற இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

 30 Oct, 2025
30 Oct, 2025                           143
143                           
 
 24 September, 2021
 24 September, 2021

Comments