ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று 15.08.2022 75-வது சுதந்திரதத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் திருச்சி மண்டல இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் சார்பாக ஸ்ரீரங்கம் காந்தி சிலை அருகில் கொண்டாடப்பட்டது தேசிய கொடியினை திருச்சி மண்டல உதவி ஆணையர் ம.லட்சுமணன் ஏற்றி வைத்தார், ஸ்ரீரங்கம் கோயில் மேலாளர் கு.தமிழ்ச்செல்வி திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திருச்சி மண்டல திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, ஏழை , எளியோருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் ஆகியோர் இன்று (15.8.22) வழங்கி , பொதுமக்களுடன் பொது விருந்தில் பங்கேற்று உணவு உட்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ்,கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், வருவாய் கோட்டாட்சியர் , ஆர். வைத்தியநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments