இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு கொண்டாட்ட தொடக்க விழா நிகழ்ச்சிகளை  திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு கொண்டாட்ட தொடக்க விழா நிகழ்ச்சிகளை  திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

ஆகஸ்ட் 15, 2022 அன்றுடன் இந்திய சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி அதனை சிறப்பிக்கும் வகையில் பாரத பிரதமர் தலைமையில் 259 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச அளவில் விழா மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் இன்று (12.03.2021) குஜராத் மாநிலம், சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரையிலான நடை பயணத்தை துவக்கி வைத்தார்கள். 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரக ஞாபக சின்னத்தில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் திருவையாறு இசைக்கல்லூரி மாணவர்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடர்ந்து தெருக்கூத்து நடன நிகழ்ச்சியும், சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் திருச்சிராப்பள்ளி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் சுதந்திரப் பேராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் கதர் கிராமத் தொழில் துறையின் சார்பில் ராட்டிண நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்ததையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்கள்.  

இப்புகைப்படக் கண்காட்சியில் சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தியடிகள், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் அரிய புகைப்படங்களும், தண்டி யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட வரலாற்று புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.  


 
சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்தும், உப்பு சத்தியாகிராக ஞாபக சின்னத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியும் 2 கி.மீ.தூரத்திற்கு நடைபயண பேரணியை தொடங்கி வைத்தார். 


இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு கொண்டாடும் விதமாக மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு சின்னத்திலிருந்து  2 கி.மீ. தூரத்திற்கு நடைபயணம் தொடங்கி காந்தி மார்க்கெட் வரையும், காந்தி மார்க்கெட்டில் இருந்து கல்லூரி மாணவர்கள் மிதிவண்டி பயணத்தை தொடங்கி, தொடர்ந்து பெரிய கடைவீதி, என்.எஸ்.பி. சாலை, நந்திகோயில் தெரு, அண்ணாசாலை வழியாக காவிரி பாலம், மாம்பழச்சாலை, அம்மா மண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை அடைந்து பின்னர் திருவானைக்காவல் வழியாக கொண்டயம்பேட்டை, திருவளர்ச்சோலை, கல்லணை வழியாக தஞ்சாவூர் மாவட்டம் வழியாக திருவையாறு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யத்தில் 14.03.2021 அன்று உப்பு சத்தியாகிரக யாத்திரை முடிவடையும்.   

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈ.வெ.ரா.பெரியார் கல்லூரி, நேரு யுகவேந்திரா, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீரங்கம் அரசுக் கல்லூரி, சேதுராப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி, தேசிய கல்லூரி, திருவையாறு இசைக்கல்லூரி மாணவிகள் ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை என மொத்தம் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடைபயணமாகவும், மிதிவண்டி பயணமாகவும்  கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I