தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்காக பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிசன் சிறப்பு ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதற்காக இரண்டு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களில் முகாமிட்டு தமிழகத்திற்கு ஆக்சிசனை அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து இருந்து 4 கண்டெய்னர்களில் 79.17 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிசன் இன்று காலை திருச்சி வந்தடைந்தது. திருச்சி வந்த மருத்துவ ஆக்சிஜன் கண்டெய்னர் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

இதுவரை தமிழகத்திற்கு ஆக்சிசன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 5672.59 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிசன் கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve







Comments