திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்திற்க்கு மயிலாடுதுறை மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து வந்த ரயில்களில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அப்பொழுது உடமைகளில் மறைத்து எடுத்து வந்த பயணிகளிடம் இருந்து 21.340 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை பொருட்களின் மதிப்பு 79 லட்ச ரூபாய் இருக்கும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்துவது தொடர் கதையாகியுள்ளது . தொடர்ந்து பயணிகளிடம் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments