8.64 லட்சம் மதிப்புள்ள தங்கம் கட்டிங் பிளேயரில் வைத்து கடத்தல்!

8.64 லட்சம் மதிப்புள்ள தங்கம் கட்டிங் பிளேயரில் வைத்து கடத்தல்!


நேற்று(07.05.21)ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூரை சேர்ந்த செந்தில் குமார் (41)என்ற பயணி நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர் .அப்போது அவர் கட்டிங் பிளேயரில் மறைத்து எடுத்து வந்த உருளை வடிவிலான இரண்டு தங்க குச்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செந்தில்நாதன் எடுத்துவந்த தங்கத்தின் அளவு 178 கிராம் எனவும் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 8.64 லட்சம் என தெரியவருகிறது!

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon