திருச்சி கருமண்டபம் பகுதி ஆல்பா நகரில் வசித்து வந்தவர் சங்கர் (58). இவர் சொந்தமாக 5 ஆம்னி பேருந்துகள் வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் வெளியூரில் வசித்து வந்தர். இந்நிலையில் நீண்ட நாட்களாக சங்கர் 80 லட்சம் கடன் பிரச்சனையால் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் பணியாற்றிய ஊழியர்கள் கணக்கு காண்பிக்க நள்ளிரவில் அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்னி பேருந்து உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments