அரசு அலுவலர்கள் அலட்சியத்தால் 879 செல்லாத ஓட்டுகள்

அரசு அலுவலர்கள் அலட்சியத்தால் 879 செல்லாத ஓட்டுகள்

தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில், லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு, கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. வாக்காளர்கள், தங்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று, ஓட்டுப்பதிவு செய்தனர். தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள், போலீசார், தாங்கள் பணிபுரியும் இடங்களிலேயே தபால் ஓட்டு பதிவு செய்தனர்.

 திருச்சி லோக்சபா தொகுதியில், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீசார், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ராணு வத்தினர் என 8 ஆயிரத்து 665 பேர் தபால் ஓட்டு செலுத்தியிருந்தனர். இந்த தபால் ஓட்டுகள் தனி அறையில் நேற்று எண்ணப்பட்டன.

இதில், அதிகபட்சமாக, மதிமுக வேட்பாளர் துரை வைகோ 3 ஆயிரத்து 336 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆயிரத்து 674 ஓட்டுகளும், அமமுக வேட்பாளர் செந்தில்நா தனுக்கு ஆயிரத்து 186 ஒட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷூக்கு 706 ஓட்டுகளும் கிடைத்தன.

இதிலும், நோட்டாவுக்கு 289 பேர் ஓட்டளித்தி ருந்தனர். மேலும், உரிய முறையில் விண்ணப்ப படிவங்கள் நிரப்பாத, ஓட்டுகள் அளிக்காதவை என 879 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன.

100% வாக்களிப்பு என்ற நோக்கத்தோடு அரசு அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர் இருப்பினும் அரசு அதிகாரிகள் வாக்களித்த தபால் ஓட்டுகளிலே 879 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன .. விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு அதிகாரிகளேஇப்படி செயல்பட்டு இருப்பது அதிர்ச்சி அளி க்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision