மர்மமான முறையில் இறந்து கிடந்த 9 மயில்கள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த 9 மயில்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடுகப்பட்டியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் மயில்கள் இறந்து கிடப்பதாக மணப்பாறை வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து வனச்சரக அலுவலர் மகேஸ்வரன் மற்றும் வனத்துறையினர்,  நிகழ்விடம் சென்று பார்வையிட்ட போது தென்னந்தோப்பில் எட்டு பெண் மயில்கள், மற்றும் ஒரு ஆண் மயில் உள்பட 9 மயில்கள் கூட்டமாக உயிரிழந்து கிடந்தன. இதைத்தொடர்ந்து இறந்த மயில்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக மணப்பாறை வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், மயில்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னர், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu