போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றிருந்த 9 பேர் கைது

போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றிருந்த 9 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம்செய்ய இருந்த திருச்சி பீமநகர் இ.பி. ரோடு பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (54) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி கிருஷ்ணாஜிபட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது ராவுத்தர் (53) ஆகியோர் தனது பிறந்த தேதி மற்றும் முகவரியில் மாற்றம் செய்து மலேசியா செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போல் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம், அழகன் குளம் பகுதியை சேர்ந்த ருத்ரபசுபதி (60) என்ற பயணி போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றிருந்தது தெரியவந்தது. இதேபோன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா தளிர் மருதூர் பகுதியைச்சேர்ந்த போஸ் (53) என்ற பயணி தனது பிறந்த தேதியில் மாற்றம் செய்தது தெரியவந்தது.

மேலும் திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியைச்சேர்ந்தகாதர் உசேன் (51), புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (43) மற்றும் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணி மற்றும் ஏர் ஏசியா விமானத்தில் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் (52) என்ற பயணி ஆகியோர் பாஸ்போர்ட்டில் பெயர் மற்றும் முகவரியில் மாற்றம் செய்து மலேசியா செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மலிண்டோ விமானத்தில் மலேசியா செல்ல இருந்த திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (48) என்ற பயணி போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision