புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 98 % தேர்ச்சி- முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு

பிளஸ் டூ பொதுத் தோ்வு மாா்ச் 3 ம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மூன்றாம் தேதி முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றது.
இதற்கான முடிவுகளே நேற்று வெளியானது. கடந்த ஆண்டுகளை விட கூடுதல் விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்நிலையில் சமயபுரம் அருகே புறத்தாகுடியில் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 150 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 147 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சியில் கடந்த ஆண்டை விட இம்முறை 98% சதவீதமாக உயர்ந்து உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் தெரிவித்தார்.மேலும் பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் பொன்னாடை போர்த்தி கெளரவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில் முதலாம் இடம் பெற்ற மாணவி ௫த்ரா (550) , இரண்டாம் இடம் பிடித்த மாணவி கவிதா (538), மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவி ஜீவிதா மற்றும் மகாலட்சுமி (525) மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து தாவரவியல் பாடத்தில் இரண்டு மாணவிகள் 100 மதிப்பெண்ணும், புள்ளியியல் பாடத்தில் ஒரு மாணவி 100 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதனைத்தொடர்ந்து பள்ளி தாளாளர் அருள் முனைவர் கஸ்பர் தலைமையாசிரியர் இராபர்ட் செல்வன் மற்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகளை வாழ்த்தினர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision