Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நேர்மையுடனும், ஈடுபாட்டுடனும் கூடிய கடின உழைப்பே எனது வெற்றியின்  மந்திரம் – திருச்சியில் நீரஜ் சோப்ரா

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி) ‘அமேதிஸ்ட்’ என்ற பெயருடைய, 506 படுக்கை வசதி கொண்ட ஆடவர் விடுதிக்கு டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா அடிக்கல் நாட்டினார்.  பின்னர் நீரஜ் ஆற்றிய உரையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு அல்லது விருப்பம் இருக்கும் என்றும், நமக்கு மகிழ்ச்சி தரும் வேலையில் நேர்மையுடனும் ஈடுபாட்டுடனும் கூடிய கடின உழைப்பைச் செலுத்தினால் வெற்றி நிச்சயம் என்றார்.

அதனையே தாம் ஈட்டி எறதலில் செய்ததாகவும், தொடக்கத்தில் தமக்கு இந்த விளையாட்டினைக் குறித்து பெரிதாகத் தெரியாது என்றும், எனினும் 
இவ்விளையாட்டின் மீது விருப்பம் கொண்டு, கடின உழைப்பு மற்றும் 
முயற்சியினால் வெற்றி பெற்றதாகவும் கூறினார்.

என்.ஐ.டி திருச்சி விளையாட்டிற்குத் தரும் முக்கியத்துவம் குறித்து உற்சாகமடைந்தார். என்.ஐ.டி திருச்சி இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ், நீரஜ் அவர்களை அன்போடு வரவேற்று, என்.ஐ.டி திருச்சியின் செயல்பாடுகளில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.

தமது கழகம் என்.ஐ.டிக்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் 
செயல்படுவதாகவும், தற்போது நீரஜ் அவர்களின் இருப்பு, இன்னும் நிறைய 
மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்றார். ஒலிம்பிக்   
வரலாற்றிலேயே, தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியரை, 
இடைப்பட்ட நாட்களில் ஏற்பட்ட காயத்தைப் பொருட்படுத்தாது தாம் சாதித்ததைக் 
குறித்து உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

என்.ஐ.டி திருச்சி மாணவர் நலன் துறை முதல்வர் முனைவர் ந.குமரேசன் 
வரவேற்புரையாற்றினார். அவர் பேசுகையில், தொடக்கத்தில் விடுதிகளுக்கு அகேட், கோரல், டைமண்ட், டோபாஸ் என பெயரிட்டுத் தொடர்ந்து, விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களின் பெயர்களைச் சூட்டுவதை வழக்கமாய்க் கொண்டுள்ளதாகக் கூறினார்.

அந்த வரிசையில், ‘அமேதிஸ்ட்’ ஊதா நிறமுடைய ஒரு வகைப் படிகக்கல் என்றும், இந்தப் பாரம்பரியம், இவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள், வருங்காலத்தில் தத்தமது வேலைகளில் இந்த ரத்தினங்களைப் போன்று பிரகாசித்து, கழகத்தின் மதிப்பை மேன்மேலும் உயர்த்த விருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *