திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் வியாபாரம் செய்கின்றவர்கள் அனைவரும் தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்தி அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தப்படாதாகயிருப்பினும் வரும் 23.10.2021 சனிக்கிழமை அன்று நடைபெறும் மெகா கொரோனா தடுப்பு முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மேலும் அதற்கு உண்டான சான்றிதழை 25.10.2020 திங்கட்கிழமை அன்று மாநகராட்சி களப்பணியாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு வரும்போது அவர்களிடம் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களை வணிக நிறுவன உரிமையாளர்கள் 25.10.2021 முதல் அவர்களைத் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. மேலும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் மட்டுமே அவர்களை பணியில் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சிக்கு கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments