திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… இல்லம் தேடி கல்வி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குள் இடர்பாடுகள் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சொன்னதுதான் முதலமைச்சர் அழகாக வடிவமைத்து கொடுத்த திட்டம் தான் இல்லம் தேடி கல்வி. மரக்காணத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசும்போது கூட இது திராவிட திட்டம் என்று பேசியிருக்கிறார். திராவிட திட்டம் என்று சொல்லும் பொழுதே நாங்கள் எந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதல்வர் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறார். அந்த வகையிலே நாங்கள் கவனத்துடன் செயல்படுத்துவோம்.

திமுக கட்சியின் மீது கலங்கம் ஏற்படுத்தும் கட்சி நிர்வாகி மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு நிச்சயம் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். மேலும் கேள்விக்கு ஒன்று பதிலளித்த அவர்…. மூன்றாம் அலையைப் பொறுத்த வரைக்கும் சுகாதாரம் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே டெல்லி சென்று வந்துள்ளார். அவர் எப்படி வலியுறுத்துகிறாரோ ஊரடங்கு உத்தரவில் எந்த ஒரு தளர்வாக இருந்தாலும் சுகாதாரத் துறை அமைச்சரின் கருத்து கேட்டு தான் செய்து வருகிறோம். அந்த வகையில் அவர் என்ன வலியுறுத்துகிறார்களோ அதன்படி நடவடிக்கைகள் எடுப்போம் என்று பதிலளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision







Comments