திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருச்சி மாநகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதாகவும் தங்களுக்கு அதனால் ஏற்படும் இடையூறுகள் குறித்தும் திருச்சி விஷன் வாசகர்கள் தொடர்ந்து நமக்கு புகார் அளித்து வருகிறார்கள். அதனை நாம் தினசரி #தீர்வை_நோக்கி என்ற தலைப்பின் கீழ் செய்தியாக வெளியிட்டு வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர் பாத்திமா நகர் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து நிற்பதாகவும் அப்பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருப்பதாகவும் நேற்று செய்தி வெளியிட்டோம்.

இதனை தொடர்ந்து , மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அவ்விடத்தை பார்வையிட்டு தேங்கி நின்ற மழைநீரை அப்புறப்படுத்தினர். மேலும் வாய்க்காலில் ஏற்பட்டிருந்த உடைப்பும் உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட முடியாமல் வீட்டின் உள்ளேயே தவித்துக்கொண்டிருந்த மக்களுக்கு இன்று இனிப்பான தீர்வு கிடைத்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision



            
            
            
            
            
            
            
            
            
            


Comments