திருச்சி உறையூர், குழுமணி ரோடு, லிங்க நகரில் வசித்து வருபவர் உமா மகேஸ்வரி (43). இவர் வயலூர் ரோட்டில் உள்ள கீதா நகரில் கேகே கிச்சன் என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். இன்று (15.11.2021) காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து ராமலிங்க நகர் வழியாக கீதா நகர் செல்லும் பொழுது ராமலிங்க நகர் 5வது கிராசில் எஸ் எஸ் அப்பார்ட்மெண்ட் அருகில் தனது இரு சக்கர வாகனத்தில் உமா மகேஸ்வரி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரிந்த நபர்கள் அப்பெண்ணின் வாகனத்தை இடித்து நிலைகுலையச் செய்து விட்டு அவரது கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் துணை செயினை பிடித்து அறுத்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதனால் சற்று தடுமாறி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார். ஆனால் செயின் பறித்த நபர்கள் வேகமாக சென்று விட்டனர்.
அறுத்துக் கொண்டு சென்ற செயினில் எடை சுமார் 80 கிராம் (10 பவுன்) ஆகும். இதுகுறித்து உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலைத்தில் உமா மகேஸ்வரி புகார் மனு அளித்தார். இது தொடர்பாக உறையூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments