திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்
என வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள கோ அபிஷேகபுரம் கோட்டம் அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் பிரச்சார பிரிவு சார்பாக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments