108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வரும் நவம்பர் 19 -ம் தேதி இரவு 8.30 – மணிக்கு கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
அன்றைய தினம் கோயிலின் கார்த்திகை கோபுரம் அருகே பெரிய சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி சொக்கப்பனை கொளுத்தும் வைபவத்தினைக் கண்டருளுவார்.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும்விழா இன்று நடைபெற்றது. முகூர்த்தகாலை பட்டாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழுங்க, கார்த்திகை கோபுரத்தின் முன்பு கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர்.
கோயில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி முகூர்த்தக்கால் நடும் வைபவத்தில் பங்கேற்றது.இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள், உள்ளிட்ட திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். இந்த பந்தல்காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கு சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq



            
            
            
            
            
            
            
            
            
            


Comments