Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு வரைமுறைகள் அடுத்தவாரம் இறுதி செய்யப்படும் – அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலைப்பட்டியில் உள்ள பள்ளியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் குறைக்கேட்டு மனுக்களை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மகேஸ்….ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு தொடர்பான வரைமுறைகள் அடுத்தவாரம் இறுதி செய்யப்படும். முதல்வருடன் கலந்தாலோசித்து விரைவில் பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதியை அறிவிப்போம்.

சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முடிவு எடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் நிலையில் அவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பள்ளிகள் நவம்பரில் தான் திறக்கப்பட்ட நிலையில் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த ஆண்டு எப்பொழுதும்போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இத போன்ற நடைமுறைகள் தளர்த்தப்படும்.

 திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை விளை நிலங்களில் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டுள்ளது. பாதிப்பு இருக்கும் பட்சத்தில்நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நவம்பர் 19ஆம் தேதி குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் குழந்தைகள் மீதான் வன்கொடுமைகள் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. 

ஏற்கனவே அரசு பள்ளிகளில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

மழை காரணமாக பல்வேறு அரசு பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில், ஏற்கனவே பள்ளிகளின் நிலை குறித்து கேட்டுள்ளதாகவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் இது குறித்த ஆய்வினை மேற்கொள்ள ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம்.அதற்கான ஆய்வு பணிகள் நடைப்பெற்று வருகிறது. ஆய்வறிக்கை வந்த பின்பு பள்ளிகளில் உரிய வசதி மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.பொதுப்பணித்துறையினரிடமும் இது குறித்து பேசி உள்ளோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *